இந்தியாவில் 50 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

111 2
111 2

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 இலட்சத்து 20 ஆயிரத்து 359 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், ஆயிரத்து 290 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் .

இதன்படி, கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .