கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

1 23
1 23

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 120பேர் பாதிக்கப்பட்டதோடு, 7பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 867பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 200பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், எட்டாயிரத்து 558பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 23ஆயிராயிரத்து 109பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 76பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.