கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – செங்கோட்டையன்

download 11
download 11

கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பாடசாலைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடில் இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆந்திரா, அஸ்ஸாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டமை குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் பாடசாலைகள் திறப்புக்கு தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்திலிருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவே வியக்கும் அளவுக்கு அரசின் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2.5 இலட்சம் தனியார் பாடசாலை மாணவர்கள் அரசு பாடசாலையில் சேர்ந்த நிலையில், செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும் என்றும் 15 இடங்களில் தொடக்க பாடசாலைகளும் 10 இடங்களில் உயர்நிலைப் பாடசாலைகளும் தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.