அமெரிக்காவில் 2 இலட்சத்தை கடந்தது கொரோனா தொற்றின் உயிரிழப்புக்கள் !

American opinion on COVID 19 contact tracing apps and digital privacy 940x540 1
American opinion on COVID 19 contact tracing apps and digital privacy 940x540 1

Published by T. Saranya on 2020-09-23 10:3

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவில் கொரோனாவால் 6.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு டகோட்டா மற்றும் உட்டா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த மைல்கலை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று புதிய இறப்பு எண்ணிக்கை ஒரு “பயங்கரமான விஷயம்” என்றும், சீனா வைரஸை “நிறுத்தியிருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், “நீங்கள் இரண்டு மில்லியன், 2.5 அல்லது மூன்று மில்லியன்” பேர் உயிரிழந்திப்பார்கள் என தெரிவித்துள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் செவ்வாயன்று புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 200,005 என அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் வெடிப்பு தொடங்கியதிலிருந்து பல்கலைக்கழகம் அமெரிக்க மற்றும் உலகளாவிய கொரோனா வைரஸ் தரவுகளை சேகரித்து வருகிறது.

அமெரிக்காவில் முதல் கொரோனா தொற்று ஜனவரி மாதம் உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கையாள்வது குறித்து ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளது.

“கடந்த ஆறு மாதங்களில் டொனால்ட் ட்ரம்பின் பொய்கள் மற்றும் திறமையின்மை காரணமாக, வரலாற்றில் அமெரிக்க வாழ்வின் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றை நாங்கள் கண்டிருக்கிறோம்” என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் திங்களன்று தெரிவித்துள்ளார்.

“இந்த நெருக்கடி, ஒரு உண்மையான நெருக்கடி, தீவிர ஜனாதிபதி தலைமை தேவைப்படும் ஒரு நெருக்கடி, அவர் அதற்குத் தயாராக இல்லையென அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் செயல்படத் தவறிவிட்டார். அத்துடன் அவர் பீதியடைந்தார். மேலும் உலகின் எந்தவொரு நாட்டை விடவும் மோசமான வேலையை அமெரிக்கா செலுத்தியுள்ளதா? என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கட்டது .