இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்!

fli 720x450 1
fli 720x450 1

இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல்முறையாக முதல் நேரடி விமானம் ஒன்று சென்றடைந்துள்ளது

இந்த விமானத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய அதிகாரிகளும், இஸ்ரேல் பிரதமரின் முக்கிய அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைதி ஒப்பந்தத்திற்கு பின்னர் நடைபெறும் முதல் விமானப்போக்குவரத்து பஹ்ரைன் நாட்டுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை நிலைநாட்ட உதவும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனிடையியே கடந்த 15ஆம் திகதி வெள்ளைமாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது .