இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றுக்கு பலி!

Nuclear scientist Shekhar Basu dies from Corona News
Nuclear scientist Shekhar Basu dies from Corona News

இந்தியாவின் சிரேஷ்ட அணு விஞ்ஞானியும், இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இன்று வியாழக்கிழமை மறைந்தார்.

68 வயதான டாக்டர் சேகர் பாசு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் அவர் மறைந்தார். மூத்த அணு விஞ்ஞானியான டாக்டர் சேகர் பாசு இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.