சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு பச்சைக்கொடி – உலக சுகாதார ஸ்தாபனம்

china flag copy
china flag copy

மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மக்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை தடுப்பூசிகளை விநியோகிக்க உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு அதன் ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளதாக சீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

சீனா தனது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு திட்டத்தை ஜூலை மாதம் ஆரம்பித்தது. தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இன்னும் முழுமையடையாததால், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு முழுமையாக நிறுவப்படவில்லை.

எனினும் லட்சக்கணக்கான அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் கருதப்படும் பிற வரையறுக்கப்பட்ட குழுக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதியில், சீனாவின் மாநில கவுன்சில் கொவிட்-19 தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுதிட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாக தேசிய சுகாதார ஆணைய அதிகாரி ஜெங் ஜாங்வே செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .

“ஒப்புதலுக்குப் பிறகு, ஜூன் 29 அன்று, சீனாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்துடன் தொடர்புடைய பிரதிநிதிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டோம்.

இதன்போது எமது திட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தானத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .