மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் சிற்றி நகரங்களுக்கு வரும் நாட்களில் அதிகபட்ச கொரோனா எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.

ரேடியோ-கனடா நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரு நகரங்களும் செம்மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு எச்சரிக்கைக்கு நகர்த்தப்படவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

“மொன்ட்றியல் மற்றும் கியூபெக் சிற்றி ஆகியவை தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள். அவை சிவப்பு மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளன.

கியூபெக்கில் நேற்று 896 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.