சிரியாவில் 46 இலட்சம் குழந்தைகள் உணவு இன்றி தவிப்பு!

2 13
2 13

சிரியாவில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 46 இலட்சம் குழந்தைகள் உணவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பு தெரிவித்துள்ளது. ‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்,

சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான அப்பிள், ஒரேஞ், வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில், சுமார் 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் என ‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பு தெரிவித்துள்ளது.