மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை- பரிசோதனை முடிவில் தகவல்

download 3 3
download 3 3

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ், கடந்த 25ஆம் திகதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன் பின்னர் தினேஷ் குண்டுராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் அண்ணா அறிவாலய தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டது.

இதில் ஸ்டாலினுக்கும் அண்ணா அறிவாலய நிர்வாகிகள் 7 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.