வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு – ராகுல் காந்தியின் பேரணி இன்று ஆரம்பம்

Rahul Gandhi 1
Rahul Gandhi 1

புதிய வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.

அதற்கமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகவுள்ள ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி, எதிர்வரும் 6ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையிலேயே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.

இந்த பேரணி நேற்று ஆரம்பமாகி 5ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தப் பேரணி நேற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.