ஸ்பெய்னில் திடீரென பிறப்பிக்கப்பட்டது அவசர நிலை !

vikatan 2020 01 be7869e6 02b5 49c3 aa44 7d0a7c411689 vikatan 2020 01 46656543 75af 431c b418 dfa024e2c6a6 corona 4801040 640
vikatan 2020 01 be7869e6 02b5 49c3 aa44 7d0a7c411689 vikatan 2020 01 46656543 75af 431c b418 dfa024e2c6a6 corona 4801040 640

ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒருவார கால அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு முடக்க செயற்பாடுகளுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஸ்பெய்ன் தலைநகர் உட்பட அதனை அண்மித்துள்ள நகரங்களுக்கு 15 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சுமார் 7 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை ஸ்பெய்னில் நாளை மறுதினம் தேசிய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.