கனடாவில் பதுங்கு குழியை வாங்கிய நபருக்கு கிடைத்த இரும்புப் பெட்டியைத்திறக்க முயற்சி!

கனடாவில் பதுங்கு குழி ஒன்றை வாங்கிய நபருக்கு; அதற்குள் கிடைத்த ஒரு இரும்புப்பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

காரணம் அந்த பெட்டியை திறப்பதற்கான குறியீட்டு எண் யாருக்கும் தெரியவில்லை. பூஜ்யம் முதல் 99 வரையிலான மூன்று எண்களைக் கொண்ட அந்த குறியீட்டு எண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் இதுவரை வெவ்வேறு எண்களை பயன்படுத்தி 400 முறை அந்த பெட்டியை திறக்க முயற்சி மேற்கோள்ளப்பட்ட நிலையில், தோற்றுப்போய்விட்டார்.

ஆகவே, பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கும் நிலையில் எப்படியாவது திறந்து விடுவதற்காக வல்லுநர்கள் குழு ஒன்றை அழைத்துள்ளார்.

அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில், நேரலையில் அந்த பெட்டியை திறக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாக அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள் .

பெட்டி திறந்தால்தான் அதற்குள் என்ன இருக்கின்றது என்கின்ற மர்மம் விலகும்.