இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று (14) ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

பேச்சுவார்த்தையானது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின் கீழ் லெபனான் தெற்கு எல்லை நகரமான நாகியரேவில் இடம்பெறவுள்ளது