அப்பிள் நிறுவனம் புதிய ஐ12 கைபேசியை அறிமுகம் செய்துள்ளது!

அப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ12 கைபேசி வரிசையினை அறிமுகம் செய்துள்ளது.

கலிபோர்னியாவில் நேற்று (13) இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய ஐ12 கைபேசியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி,ஐ12 மினி, ஐ12 , ஐ12 ப்ரோ மற்றும் ஐ12 ப்ரோ மச் ஆகிய 4 புதிய திறன் பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த அனைத்து திறன்பேசிகளும் 5 ஜி வலையமைப்பை அணுகுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.