ஆர்ஜென்டினாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

corono
corono

ஆர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்தைக் கடந்துள்ளது.

ஆர்ஜென்டினாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 305 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 17 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 572 ஆக அதிகரித்துள்ளது.

7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.