ஐ.நா மனித உரிமை பேரவையின் புதிய உறுப்பு நாடுகள் தெரிவு!

14
14

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றுள்ளன. அத்துடன், குறித்த உறுப்பு நாடுகள் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிக்க முடியும் என்பதுடன், தொடர்ச்சியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஆரம்பமாகும் புதிய 3 ஆண்டுகாலப் பகுதிக்காகவே இந்த நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் மூலம் குறித்த நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் குறித்த நாடுகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.