ஆர்மீனிய ஆக்கிரமிப்பிலிருந்து மேலும் எட்டு கிராமங்களை விடுவித்துள்ள அசர்பைஜான் இராணுவம்!

202009272114468842 Tamil News Fighting erupts between Armenia Azerbaijan over disputed SECVPF
202009272114468842 Tamil News Fighting erupts between Armenia Azerbaijan over disputed SECVPF

அசர்பைஜான் இராணுவம் ஆர்மீனிய ஆக்கிரமிப்பிலிருந்து மேலும் எட்டு கிராமங்களை விடுவித்துள்ளதா அசர்பைஜான் ஜனாதிபதி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

அதன்படி புசூலி மாவட்டத்தின் கரடாக்லி, கதுன்புலாக், கராகொல்லு கிராமங்களையும், கோஜாவெண்ட் மாவட்டத்தின் புலுட்டன், மெலிக்ஜான்லி, கெமெர்டுக், டெக் மற்றும் தாகேசர் கிராமங்களையும் விடுவித்துள்ளது.

ஆர்மீனியப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் அசர்பைஜான் இராணுவத்தின் நடவடிக்கையில், செப்ராயில், ஹட்ருத் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் முன்பு விடுவிக்கப்பட்டன.

செப்டெம்பர் 27 ஆம் திகதியன்று ஆர்மீனிய தாக்குதல்களால் 42 அசர்பைஜான் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 206 பொதுமக்கள் காயமடைந்ததாக அசர்பைஜானின் பிரதி வழக்குத்தொடுநர் நாயகம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஆர்மீனிய படைகளால் புதன்கிழமை மேலும் ஒரு அசர்பைஜான் நாட்டவர் கொல்லப்பட்டார், இது ஆர்மீனிய தாக்குதல்களில் பொதுமக்களின் இறப்பு எண்ணிக்கையை 43 ஆகக் உயர்த்தியது.

செப்டம்பர் 27 அன்று ஆர்மீனிய படைகள் அசர்பைஜான் குடியேற்றங்கள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து மோதல்கள் ஆரம்பமாகியமையும் குறிப்பிடத்தக்கது.