இந்தியாவில் கொரோனாவால் 52 தொற்றாளர்கள் உயிரிழப்பு

corono
corono

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த 52 பேர் நேற்று உயிரிழந்தனர்.

இதற்கமைய, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் 4 ஆயிரத்து 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது.

5 ஆயிரத்து 83 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது.

42 ஆயிரத்து 566 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதேநேரம், தமிழகத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம், 93 ஆயிரத்து 844 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83 லட்சத்து 40 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 95 ஆயிரத்து 538 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 85 லட்சத்து 84 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் பரவியவர்களை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதாலேயே கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.