ரஷ்யாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ccccc 1 1
ccccc 1 1

ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 13ஆயிரத்து 754பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 286பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 54ஆயிரத்து 163பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 23ஆயிரத்து 491பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 82ஆயிரத்து 575பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து இலட்சத்து 48ஆயிரத்து 97பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் கறிப்பிடத்தக்கதுஎ