அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க ஜப்பான் முடிவு!

பேரழிவுகரமான புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த மாதத்திற்குள் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என ஜப்பானிய ஊடகங்கள் இன்று (16) செய்தி வெளியிட்டுள்ளன.

டோக்கியோ எலக்ட்ரிக் பவர் (Tokyo Electric Power Company) நிறுவனம் 2011 மார்ச்சில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையம் முடங்கியதில் இருந்து ஒரு மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அசுத்தமான தண்ணீரை சேகரித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஜப்பானிய தொழில்துறை அமைச்சர் ஹிரோஷி கஜியாமா தெரிவித்துள்ளதுடன் விரைவில் கதிரியக் நீரை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.