அமெரிக்க ஜனாதிபதியின் மகனுக்கு கொரோனா!

633636
633636

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் பரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் தென்படவில்லை எனவும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அவர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் வீடு திரும்பியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.