உலகளவில் வளி மாசடைவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணம்-டொனால்ட் ட்ரம்ப்!

571608
571608

உலகளவில் வளி மாசடைவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு அந்நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணமாக அமைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவே காற்றில் மாசுகள் கலக்கப்படுகின்றன.

எனது நிர்வாகத்தின் கீழ் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே சமயம், எரிசக்தி உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.