மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை வானிலை ஆய்வு நிலையம்!

fish2
fish2

அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் நாளை (18.10.2020) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். நாளை மறுநாள் (19.10.2020) மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

20 ஆம் திகதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்றும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது