கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது குறித்து நரேந்திர மோடி ஆலோசனை!

download 1 8
download 1 8

கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் விரைவில் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். பண்டிகைக்காலங்களில் மக்கள் கவனமுடன் இருக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் 3 தடுப்பூசிகள் இறுதிக் கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்காக மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி தடுப்பூசி உருவாக்கல் நிலைகள், அதன் பரிசோதனை நிலவரம், மக்களுக்கு வினியோகிக்கும் முறை போன்றவற்றை கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் அவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் நாட்டின் கொரோனா நிலவரம், தடுப்பூசி வினியோகத்துக்கான தயார் நிலை, வினியோக முறை, நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் வினியோகம் தொடர்பாக நிபுணர்களுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார். கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் விரைவில் கிடைக்க செய்ய வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர வலியுறுத்திய அவர், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், ஒழுங்காக கை கழுவுதல், தூய்மையை பராமரித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருமாறும் எதிர்வருகிற பண்டிகை நாட்களில் இன்னும் கவனமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.