ஐஸ்லாந்தின் தென் மேற்கு பகுதியில் நிலநடுக்கம்

iceland 5 1280x720 1
iceland 5 1280x720 1

ஐஸ்லாந்தின் தென் மேற்குப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கிராம்ஸ்வாட்ன் எரிமலை மற்றொரு வெடிப்புக்கு தயாராகி வருவதாக விஞ்ஞானிகள் கடந்த வாரம் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தலைநகருக்கு தெற்கே 20 மைல் தொலைவில் உள்ள கிரிசுவிக் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஐஸ்லாந்து வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.