வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பியதாக ஈரான்மீது குற்றச்சாட்டு!

ஜனநாயக வாக்காளர்களுக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை அனுப்ப ஈரான் தான் காரணம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு 13 நாட்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜோன் ராட்க்ளிஃப் கூறுகையில், ‘ஒரு தீவிர வலதுசாரி ட்ரம்ப் சார்பு குழுவிலிருந்து இந்த மின்னஞ்சல்கள் வந்தன. அவை அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தது.

வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கும், அமைதியின்மையைத் தூண்டுவதற்கும், சேதப்படுத்துவதற்கும் ஈரானின் ஸ்பூஃப் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்.பி.ஐ இயக்குனர் கிறிஸ்டோபர் வேரே அமெரிக்க தேர்தல் அமைப்புகள் இன்னும் பாதுகாப்பானவை மற்றும் நெகிழும் தன்மை வாய்தவை என்று கூறினார்.

உலக நாடுகளே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது.