‘டொக்டர் ரெட்டீஸ்’ நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல்!

கொரோனா தொற்றுக்கான ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியை இந்தியாவில் சோதித்துப் பார்க்க டொக்டர் ரெட்டீஸ் (Dr. Reddy’s ) எனப்படும் மருந்து நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், குறித்த நிறுவனத்தின் மீது தற்போது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் இத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் அதன் உற்பத்தித் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

எனினும் 24 மணி நேரத்தில் நிறுவனம் இயல்பான நிலைக்கு திரும்பும் எனவும், தேவையான முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.