சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய வசதிகள் அறிமுகம்!

எகிப்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் 301 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் முதலீட்டில் உணவகங்கள், மின்சாரத்தில் இயங்கக்கூடிய பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் எகிப்தின் கிசா பிரமீட்டுக்கள் உள்ள பகுதியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 9 பிரமிட்ஸ் லோஞ்ச் (9 Pyramids Lounge) என்ற இந்த உணவகமானது 1341 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

இதன் மூலம் சுற்றுலா பயணிகள் குறித்த உணவகத்தில் உணவருந்தியபடியே, பிரமிட்டுக்களை கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.