கின்னஸில் இடம்பிடித்த தீயணைப்பு வீரர்!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாகாணத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வரும் பிராண்டன் பெரிட்ஜ் (Brandon Berridge ) என்ற வீரரொருவர் தனது உயரம் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

குறித்த வீரரின் உயரம் 6 அடி 11.17 அங்குலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தான் உயரமாக இருப்பதால் பணியின் போது சில இடங்களில் அனுகூலமாகவும் சில இடங்களில் சிரமமாகவுமுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.