கொலம்பியாவின் துணை ஜனாதிபதிக்கு கொரோனா

download 31
download 31

கொலம்பியாவின் துணை ஜனாதிபதி மார்டா லூசியா ராமிரெஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 66 வயதான ராமிரெஸ், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அதிகரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மணிசலேஸில் உள்ள ஆளுநர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தேன். இதன் விளைவாக நேற்று கொரோனா சோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கடவுளுக்கு நன்றி. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் ஆலோசனையின்படி அடுத்த 15 நாள்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்துதலில் இருக்கப்போகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைச் சோதனைசெய்துகொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.