உலகில் அதிக கொரோனா தொற்றாளர்களைக் கொண்ட 2ஆவது பிராந்தியமாக ஆசியா!

ஆசியா, உலகில் ஒரு கோடி கொரோனா தொற்றாளர்களை கொண்ட இரண்டாவது பிராந்தியமாக மாறியுள்ளது.

இதில் இந்தியாவிலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆசியாவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இங்கு சுமார் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் மரணங்கள் பதிவாகியுள்ளதோடு, உலகளவில் இது நூற்றுக்கு 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் நூற்றுக்கு 21 சதவீதம் மற்றும் 12 சதவீத மரணங்கள் இந்தியாவிலேயே பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை கடந்துள்ளது.

மேலும் சீனா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.