முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் – ஜோ பிடன்

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ரஷ்யாவும், பெரும் போட்டியாக சீனாவும் உள்ளது. நாம் இதனை எவ்வாறு கையாள்வது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வேன்.

இருந்தாலும் கடந்த காலத்தைப் பார்க்கும்போது அமெரிக்காவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார் என்றார்.

இந்நிலையில், ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் தொடர்ந்தும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.