கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த இத்தாலி அரசாங்கம் எடுத்துள்ளநடவடிக்கைகள் !

Italy1 720x450 1
Italy1 720x450 1

கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கையாக இத்தாலியில் உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், மற்றும் திரையரங்குகள் என்பன மூடப்பட்டுள்ளன.

அத்தோடு இரவு 8 மணிக்குள் உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான வணிக நிலையங்களை திறந்து வைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார சேவைகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலான முடக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரதமர் கியூசெப் கோன்டே கூறினார்.