வெளிநாடுகளுக்கு வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை

download 1 19
download 1 19

வெங்காயத்தின் விலை அதிரித்து வருவதைத் தொடா்ந்து வெங்காய விதைகள் ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பாக வெளிநாடு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் ‘வெங்காய விதைகள் ஏற்றுமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. விதைகள் ஏற்றுமதிக்கு இடைக்கால ஏற்பாட்டின் கீழ் உள்ள விதிகளும் இந்த தடைக் காலத்தில் பொருந்தாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னா் இடைக்கால ஏற்பாடாக வா்த்தகா்கள் மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற்று குறிப்பிட்ட வகை வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.