அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டிரம்பை எதிர்த்து கோடீஸ்வரர்

bloomberg
bloomberg

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து அந்நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான மைக்கேல் புளூம்பெர்க் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகின்ற நிலையில் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்பட 17 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

எனினும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வீழ்த்துவதற்கு தற்போதைய வேட்பாளர்கள் களம் போதுமானதாக இல்லை என்று நியூயார்க் நகர முன்னாள் மேயரான மைக்கல் புளூம்பெர்க் கவலை கொள்வதாக அவரது ஆலோசகர் ஹோவர்ட் வொல்ப்சன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முறைப்படி இணைவதற்கான ஆவணங்களை இன்னும் ஓரிரு நாட்களில் அலபாமா மாகாணத்தில் மைக்கல் புளூம்பெர்க் தாக்கல் செய்வார் என ஹோவர்ட் வொல்ப்சன் கூறியுள்ளார்.