கொரோனா தடுப்பூசி எனக்கு செலுத்தப்பட்டுள்ளது- ஷெய்க் மொஹமட்

download 6
download 6

கொரோனா தடுப்பூசி தமக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி ஷெய்க் மொஹமட் பின் ரஷிட் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ள அவர், தனக்கு தடுப்பூசி செலுத்தப்படும் ஒளிப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொவிட்-19 தடுப்பூசியை தயாரிப்பதற்காக செயற்பட்ட தங்களின் குழுவினர் தொடர்பில் தாம் பெருமிதம் கொள்வதாகவும் அந்த நாட்டு துணை ஜனாதிபதி ஷெய்க் மொஹமட் பின் ரஷிட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சத்தில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மருந்து, ஐக்கிய அரபு ராச்சியத்தில் சுமார் 31 ஆயிரம் பேருக்கு மூன்றாம் கட்டமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த மருந்தின் விளைவுகள் குறித்து முழுமையான தரவுகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.