270 இடங்கள் தேவையென்ற நிலையில் 264இடங்களை கைப்பற்றி முன்னிலையில் ஜோ பைடன்

970fd4c127e14d0eaa51fcd15644d4fb 18
970fd4c127e14d0eaa51fcd15644d4fb 18

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும் போட்டியிட்டுள்ளனர்.

வேட்பாளர் ஒருவிரின் வெற்றிக்கு 270 இடங்கள் தேவையென்ற நிலையில் தற்போது ஜோ பைடன் 264இடங்களைக் கைப்பற்றி டொனால்ட் ட்ரம்பை விட மேலும் முன்னிலை பெற்றுள்ளார்.

இழுபறி நிலையில் இருந்த 10 பிரதிநிதித்துவத்தைக் கொண்ட விஸ்கொன்ஸின் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நெருங்கியுள்ளார்.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் இதுவரை வெளியான முடிவுகளின்படி 214 இடங்களைக் கைப்பற்றியுள்ளார்.