ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு

iran1
iran1

ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி இன்று தெரிவித்துள்ளார்.

80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.