ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் அதிகரிக்கும் அபராதம்

india1
india1

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, உயர் நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் விதிக்கப்படுகின்ற அபராதத்தினை அதிகரிக்கும் சட்டமூலம் விரைவில் அமலுக்கு வருகிறது.

சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை தவறாக அனுமதியின்றி பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம் புதிய சட்டத்தின் கீழ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், பாராளுமன்றம், தர்ம சக்கரம், உயர் நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 இலட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறைத்த தண்டனை விதிக்கப்படும்.