ஜோ பைடனின் கொரோனா குழுவில் தமிழக பெண் வைத்தியர் தெரிவு!

celin 300x300 1
celin 300x300 1

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன் நியமித்துள்ள குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் செலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் மெடக்குறிச்சியை பிறப்பிடமாக கொண்டவர் செலின். நியுயோர்க் பல்கலைகழகத்தின் மருத்துவகல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றிவரும் இவர் அமெரிக்காவின் காசநோய் தடுப்புபிரிவிலும் பணியாற்றுகின்றார்.

இதேவேளை ஜோ பைடன் தனது கொரோனா வைரஸ் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் விவேக் மூர்த்தியை நியமித்துள்ளார் என்பதுடன் அந்த குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வைத்தியர் அத்துல் கவன்டேயும் இடம்பெற்றுள்ளார்