பொலிவுறும் அயோத்தி

Ayodhya
Ayodhya

அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில் 2½ வருடத்தில் கோவிலை கட்டி முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றியமைப்பதற்கு உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

  • அயோத்தி, ஆன்மிக நகரமாகக உருவாக்கப்படும்.
  • ஆங்காங்கே 10 ஸ்ரீராம் நுழைவாயில்கள் கட்டப்படும்.
  • பக்தர்கள் வசதிக்காக 10ஆயிரம் தங்குமிடங்கள் உருவாக்கப்படும்.
  • கோவிலைச் சுற்றியுள்ள 77 ஏக்கர் வளாகத்தில் எண்ணற்ற மத அடையாளங்கள் நிறுவப்படும்.
  • பசு காப்பகம், தர்ம சத்திரங்கள், வேத நிலையங்கள் மற்றும் மத கட்டிடங்கள் அமைக்கப்படும்.
  • அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் கட்டப்படும்.
  • அயோத்தி புகையிரத நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • ஐந்து நட்சத்திர விடுதிகள் அமைக்கப்படும்.
  • அயோத்தியில் சர்வதேச பஸ் முனையம் உருவாக்கப்படும்.
  • பைசாபாத்-அயோத்தி இடையே 5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட பாலம் கட்டப்படும்.
  • இராமர் கோவில் சம்பந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.
  • அயோத்தியில் உள்ள சரயு ஆற்றில் உல்லாச படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

அயோத்தி, திருப்பதி நகரம் போன்று 4 ஆண்டுகளில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.