பஹ்ரைன் நாட்டின் பிரதமர் வயது முதிர்வின் காரணமாக மரணம்!

4148848d 2abd 4d78 8272 161e97a3f01a 16x9 600x338
4148848d 2abd 4d78 8272 161e97a3f01a 16x9 600x338

பஹ்ரைன் பிரதமர் (84 வயது) கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் இன்று காலமானார்.

உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா நவம்பர் 24, 1935ஆம் ஆண்டு பிறந்தவர்.

பஹ்ரைன் இளவரசர் மற்றும் அரசியல்வாதியுமான இவர் ஓகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதமராக இருந்து வந்துள்ளார். உலகின் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர்.இவர் ஆவர்

இதேவேளை துக்க காலத்தில், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.