இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த தினம் இன்று

neru
neru

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்த தினமான நவம்பர் 14ஐ முன்னிட்டு குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் மேன்மையை போற்றும் விதமாக இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது. உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடி வருகின்றன.