தனது பதவியைஇராஜினாமா செய்தார் நாசாவின் தலைமை நிர்வாகி

202011121329147031 NASA chief Jim Bridenstine wont stay on under new president SECVPF
202011121329147031 NASA chief Jim Bridenstine wont stay on under new president SECVPF

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைமை நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் அவரது நிர்வாகத்தில் தான் பணியாற்ற விரும்பவில்லை என நாசாவின் பிரதம நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் 2018இல் நாசாவின் தலைமை நிர்வாகியாக ஜிம் பிரிடென்ஸ்டைன் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவரை குறித்த பதவியில் வைத்திருப்பதற்கு ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள் முயன்ற போதும் ஜிம் பிரிடென்ஸ்டைன் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.