வேலையை இழந்த விமானியின் வித்தியாசமான முயற்சி!

மலேசியாவில் கொரோனாத் தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

அந்தவகையில் 44 வயதான அஸ்ரின் மொஹமட் (Azrin Mohamad Zawawi )என்ற விமானி ஒருவரும் தனது வேலையை இழந்துள்ள நிலையில் நான்கு குழந்தைகளுக்கு தந்தையான அவர் சோர்ந்து போய்விடாமல் வேறு வேலையொன்றை செய்ய நினைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது அவர் ‘கப்டென் கோனர்‘ (Kapten Corner) என்ற சிறிய உணவகமொன்றை நடத்தி வருகிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால்,அவர் விமானி உடையுடனே கடைக்குச் சென்று தனது பணியை மேற்கொள்கிறார். அதனால் விமானி உடையுடன் அவர் சமைக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே பலர் அவரது கடைக்கு வருகிறார்கள்.

இந் நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக ஆரம்பித்துள்ளன. மேலும் கடையிலுள்ள அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.