பிரித்தானியாவில் அதிகரித்த கொரோனா மரணங்கள்!

download 2 12
download 2 12

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 27ஆயிரத்து 301பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 376பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 13இலட்சத்து 17ஆயிரத்து 496பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 51ஆயிரத்து 304பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 275பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.