மியன்மார் பொது தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி வெற்றி!

மியன்மார் பொது தேர்தலில் ஆங்சான் சூகியின் கட்சி பெரும்பான்மை ஆசனங்களுடன் வெற்றிப்பெற்றுள்ளது

மொத்தமாக உள்ள 664 ஆசனங்களில் 397 ஆசனங்களை ஆங்சான் சூகி பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய இரண்டாவது முறையாகவும் ஆட்சியை தொடர்வதற்கான ஆசனங்களை ஆன்சான் சூகியின் கட்சி பெற்றுள்ளது.

ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சிக்கு எதிராக போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் குறைந்தளவான ஆசனங்களையே பெற்றுள்ளனர்.

ரோஹிங்ய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த அந்த நாட்டு இராணுவத்தினரை ஆங்சான் சூகி பாதுகாப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளார்.

எனினும் இம்முறை ஆட்சியில் ஆங்சான் சூக சில மாற்றங்களை ஏற்படுத்துவார் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், அந்த நாட்டின் சட்ட ஏற்பாடுகளின் படி ஆங்சாங் சூகியினால் பதவிகளை வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.