கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 741பேருக்கு கொரோனா !

corona 330497970
corona 330497970

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 741பேர் பாதிக்கப்பட்டதோடு, 60பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இரண்டு இலட்சத்து 87ஆயிரத்து 318பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பத்து ஆயிரத்து 828பேர் உயிரிழந்துள்ளனர்.

45ஆயிரத்து 844பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 294பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு இலட்சத்து 30ஆயிரத்து 646பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்