பிரிட்டன் பிரதமர் சுய தனிமைப்படுத்தலில்

Screenshot 2020 09 22 at 12.54.59 e1605478343366
Screenshot 2020 09 22 at 12.54.59 e1605478343366

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் தொடர்புகளை கொண்டமைக்காகவே போரிஸ் ஜோன்சன் இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடந்த மார்ச் மாத இறுதியில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அம் மாத இறுதியில் குணமடைந்தார்.

எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் கொரோனா தொடர்பான எந்தவிதமான அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பிரிட்டனின் சுய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றியே அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் சக உறுப்பினரான லீ ஆண்டர்சன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தினையடுத்து கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார்.

இங்கிலந்து தற்போது அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் தவிர்த்து, இரண்டாவது முடக்கலின் கீழ் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.